"The Seal of the Prophets."
நபி முத்திரை ஹதீஸ்:
عن السائب بن يزيد رضى الله عنه قال : ذهبت بى خالتى إلى رسول الله صلّى الله عليه وسلّم، فقالت : يا رسول الله، إن إبن أختى وجعٌ. فمسح رأسى ودعا لى بالبركة، ثمّ توضأ فشربت من وضوئه، ثمّ قمت خلف ظهره، فنظرت إلى خاتهه بين كتفيه مثل زرّ الحجلة.صحيح مسلم
ஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள்,என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை என் தலையில் வைத்து தடவி விட்டார்கள். மேலும் இறைவனின் அருளிற்காக பிரார்த்தனை செய்தார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளுச் செய்தார்கள், அவர்கள் ஒளுச் செய்த தண்ணீரை நான் குடித்தேன். பிறகு நான் அவர்களுக்கு பின்புறம் நின்று நபித்துவ முத்திரையை அவர்களின் இரண்டு புஜங்களுக்கும் இடையில் பார்த்தேன். அது ஒரு கூடாரத்தின் பொத்தானைப் போல் இருந்தது. ஸஹீஹ் முஸ்லிம்.
Written by ஆசிக் அஹமது
யார் இந்த காதியானிகள் ( தம்மைத் தாமே அஹமதிய்யா என்று கூறிகொள்வோர்)
ஈமானை பறிக்கும் சூழ்ச்சி
ஓர் ஆற்றில் இரண்டு மீன்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் அது பிரிட்டிஷாரின் சூழ்ச்சியினால்தான் இருக்கும். இது பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கலைத் தேர்ச்சி பற்றி பேரறிஞர் ஷைகுல் இஸ்லாம் ஹள்ரத் மௌலானா ஹுஸைன் அஹ்மது மதனீ (ரஹ்) அவர்களின் கூற்று.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மிக அற்புதமாக ஒற்றுமையுடன் கட்டியெழுப்பப்பட்ட சமூகத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலிருந்தே தொடர்ந்து நடைபெறும் கொண்டிருக்கின்றன.
போர்களாலும், பயங்கரவாதம் போன்ற ஒதுக்கப்படும் முத்திரைகளலும் முஸ்லிம் சமூகத்தை வெல்ல முடியாட யூத, கிறிஸ்தவம் மற்றொரு தந்திரத்தையும் கையாண்டு வருகிறது.
அது முஸ்லிம்மே! நீ தொழுது கொள், ஜகாத் கொடு, திக்ர் செய், ஹஜ்ஜை நிறைவேற்று ஆனால் எதுவுமே அல்லாஹ்விடம் ஏர்க்கப்படாமல் செய்ய எங்களால் முடியும் என முழுக்கமிடும் பேரபாயமான தந்திரம்தான் அது அதாவது ஒரு மூஃமினுக்குத் தெரியாமலேயே அவனுடைய ஈமானை அபகரித்துவிடுவது இதற்காக யூத, கிறிஸ்தவர்களாக மாற்றிட முடியாது எனத் தெரிந்து, முஸ்லிம்களின் பெயரில் இருப்பவர்களைக் கொண்டே ஈமானைப் பறிக்கும் சூள்ச்சி தான் இது.
இஸ்லாத்திற்கு எதிராக காதியானி மதத்தை உருவாக்கிய ஆங்கிலேயர் ஈனரெடுத்த ஈனப்பிறப்பாகிய மிர்சா குலாம் காதியானி என்பவன் பிரித்தானியர்களால் எவ்வாறு உருவாக்கப்பட்டான்? ஆங்கிலேயர் தமது பொய் நபித்துவத்திற்கு மிர்சா குலாமை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? மிர்சா குலாமுக்கு பிரித்தானிய (கிறிஸ்தவ)ர்களுடன், யூதார்களுடன் அவ்வாறு தொடர்பு ஏர்பட்டது? பிரித்தானியர்கள், யூதர்கள், காதியானிகள் இம்மூவரும் இஸ்லாத்திற்கு ஏதிராக செய்த கூட்டுச்சதிகள் யாவை?
இவுவரான சரியான வலாற்று அடிப்படைத் தகவல்களைத் தான் இன்ஷா அல்லாஹ் இக்கையேட்டில் படிக்கப் போகிறீர்கள். இவற்றை தெளிவாக புரிய வேண்டுமெனில் ஐரோப்பிய அந்நிய சக்திகள் இந்திய துணை கண்டத்தை களீகரம் செய்த வரலாற்றுப் பினணியை தெரிந்தாக வேண்டும்.
தொடரும்......
யார் இந்த காதியானிகள் பகுதி 2
Written by ஆசிக் அஹமது
வெளியே உள்ளே :
உலகெங்கும் இஸ்லாம் பரவி, எழுச்சி பெறுவதை சகித்துக்கொள்ள முடியாத மேற்குலகம் இஸ்லாத்திற்கு எதிராக செய்த சதிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இஸ்லாம் எழுச்சி பெற்று முஸ்லிம்கள் கோலோச்சிய பகுடிகளிலெல்லாம் வெளியே சிலுவை யுத்தங்கள் என்ற பெயரிலும் உள்ளே பல கீழறுப்பு வேலைகள் மூலமும் முஸ்லிம்களை திட்டமிட்டு வீழ்த்தினார்கள்.
ஸ்பெயின் வீ ழ்ச்சி:
இஸ்லாமிய ஆரம்ப நூற்றாண்டுகளில் உலகமே புருவம் உயர்த்தி ஆச்சரியப்படும் அளவு ஸ்பெயினில் ஆன்மிகம் மட்டுமின்றி தொழில், அரசியல், பொருளாதாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் என அணைத்துத் துறையிலும் வியக்கதத்க்க வகையில் முன்னேற்றம் கண்டு மிகச்சிறப்பாக நடைபெற்று வந்த 800 ஆண்டு கால இஸ்லாமிய ஆட்சியை மேற்கத்தியர் திட்டமிட்டு வீழ்த்தினர். ஸ்பெயினின் கடைசி முஸ்லிம் 1492ல் கொல்லப்படுகிறார்.
இதன் பின் ஐரோபியரின் முழு கவனமும் இந்தியாவின் பால் திரும்பியது. காரணம் ஸ்பெயினைப் போல் இன்னும் சொல்லப்போனால் ஸ்பெயினைவிட செல்வச் செழிப்புடன் நீண்ட காலம் முஸ்லிம்களின் ஆட்சி இந்தியத் துணைக் கண்டத்தில் நடைபெற்று வந்த நேரமது.
வணிகம் செய்வது. கிழக்கிந்திய கம்பெனி போன்றவை அனைத்தும் கண்துடிப்பு நாடகம் தான். அவர்களின் இந்திய வருகையின் உண்மை நோக்கம்t ஸ்பெயினில் அழித்தது போல் இந்திய முஸ்லிம்களை அழிப்பது தான்.
வாஸ்கோடகாமா
ஆகவே தான் ஸ்பெயினில் (1492) முஸ்லிம்களை கருவறுத்து ஆறே வருடத்தில் (17 -05 -1498) கிறிஸ்தவ கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த போர்த்து கீசியர்கள் வாஸ்கோடகாமாவின் தலைமையில் இந்தியா(வின் கோழிக்கோடுகப்பாட்டு துறைமுகத்தில்) வந்திறங்கினர். வந்த 12 வருடத்திற்குள் 1510 -ல் கோவா நகரைக் கைப்பற்றினர்.
1602 -ல் கிறிஸ்தவ புரோட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்த ஹாளாந்து நாட்டு டச்சுக்காரர்கள் இந்தியா(வின் மலாயா பகுதிக்கு) வந்தனர்.
1664 - ல் பிரெஞ்சுகாரர்களும் இந்தியா வந்தனர். தென்னிந்தியாவில் சென்னை சாந்தோமில் போர்ச்சுகீசியர்களும் பழவேற்காட்டில் டச்சுக்காரர்களும், புதுச்சேரியில் பிரெஞ்சுகாரர்களும் ஆதிக்கம் பெற்றிருந்தானார். (வி.போ,த.மு-செ.திவான், பக்- 13)
1598 லேயே ஆங்கிலேயர் (பிரித்தானியர்) இந்தியா வந்து 1600-ல் கிழக்கிந்திய கம்பெனியை ஆரம்பிந்துவிட்டாலும் 1700 களிலிருந்து தான் ஆங்கிலேயர் ஆதிக்கம் ஓங்கியது.
வீர மறவர்கள்
மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புடன் வந்த அந்நியர்கள் தாம் நினைத்தது போல் மிக இலகுவாக இந்தியாவின் காலூன்ற முடியவில்லை. காரணம் இந்தியாவில் அந்திய சக்திகள் காலூன்றிய மறுகணமே அவர்களை எதிர்த்துப் போரிட இஸ்லாமிய வீர மாரவர்கள் களமிறங்கினார்கள்.
1498 முதல் 1595 வரை ஒரு நூற்றாண்டு காலம கேராவில் குஞ்சாலி மரைக்காயரின் குடும்பம் நான்கு தலைமுறைகளாக அந்நியரை எடித்துப் போறிட்ட வீர வரலாறு மறக்க, மறைக்க முடியாததாகும். தரை வழித்தாக்குதல் மிட்டுமின்றி தமது 200 கப்பல்களை ஈடுப்படுத்தி கடல் வழித் தாக்குதல் மூலமும் அவர்களை திக்குமுக்காட வைத்தனர் (பார்க்க அடியேன் எழுதிய விடுதலிப் போரில் வீரமிக்க உலமாக்கள் மனாருல் ஹுதா ஆகஸ்ட் -2006)
ஆங்கிலேயர் ஆதிக்கம் :
இராபர்ட் கிளைவ் வருகைக்குப் பின் 18 -ம் நூற்றாண்டின் மாத்தியிலிருந்து ஆங்கிலேயரின் ஆதிக்கம் மிக வேகமாக வளர்ந்தோங்கியதையடுத்து முன்பை விட இந்திய சுதந்திர போராட்டம் வீரியம் பெறத் துவங்கியது.
நாடெங்கும் ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டங்கள் நடை பெற்று வந்தாலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கிய இருபெரும் மாவீரர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
தொடரும்.....
யார் இந்த காதியானிகள் பகுதி 3
Written by ஆசிக் அஹமது
சிராஜுத்தௌலா
1. வடக்கே வங்காளச் சிங்கம் (ரஹ்) 2. தெற்கே மைசூர் வேங்கை திப்பு சுல்தான் (ரஹ்). சிறிய வயதுடையவராக இருந்தாலும் மிகப்பெரிய ஒரு நாட்டின் வலிமைமிக்க இராணுவம் ஒரு நூற்றாண்டு காலம் போரிட்டால் எத்தனை சாதனைகளை புரியுமோ அதை விட பிரமாண்டமான வெற்றிமிக்க புரட்சிகளை மிக மிகக் குறுகிய காலத்திலே செய்து காட்டிய மாவீரன் தான் சிராஜுத்தௌலா, எந்தப் போரிலும் ஆங்கிலேயரிடம் தோற்க வில்லை. பிரமிக்கவைக்கும் அளவு வெற்றி மேல் வெற்றியை குவித்து வந்தார்.
சிராஜுத்தௌலா உயிருடன் இருக்கும் வரை வடபுலத்தில் நாம் வலுவாகக் காலூன்ற முடியாது என்று முவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் சிராஜுத்தௌலாவின் நெருங்கிய ஆலோசகர் மீர் ஜஃபரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். கி.பி. 1757 -ல் பிளாசி மைதானத்தில் நடந்த போரில் மீர் ஜஃபரின் மகன் மீரான் என்பவரின் மூலமே வீரமகன் சிராஜுத்தௌலாவை வஞ்சகர்கள் 1757 -ல் தூக்கி லிட்டனர். (இன்னாளில்லாஹி....)
திப்புசுல்தான்
இது போலவே தென் புலத்தில் ''பிறந்த மண்ணிலிருந்து ஆங்கிலேயனை விரைத்டும் வரை பஞ்சு மெத்தையில் உறங்க மாட்டேன்,என் உணவில் அந்நியரின் உப்பைக்கூட காக்க அனுமதியேன், முழுந்தாளிட்டு உயிரோடு இருப்பதை விட நின்று கொண்டு இறப்பதே மேல், இரு நூறு வருடங்கள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட இரண்டு வருடங்கள் புலிகளாக வாழ்வதே சிறந்தது'' என்றெல்லாம் கூறியதோடு மட்டுமின்றி அவ்வாறே வாழ்ந்து காட்டியதன் நிகரில்லா மாவீரர் திப்பு சுல்தான் ஷஹீத் (ரஹ்) அவர்கள் தாய் மாண்ணிலிருந்து அந்நியரை விரட்ட செய்த தியாகத்திற்கு இன்று வரை நிகரில்லை.
திப்பு சுல்தான் இருக்கின்றவரை தென் இந்தியாவை மைத்டுமல்ல இந்தியாவின் எந்தப் பகுதியிலும் கோலோச்ச முடியாது அன்படை நன்கு விளங்கிக் கொண்ட ஆங்கிலேய சண்டாளர்கள் திப்புவின் தளபதி மீர் ஸாதிக்கை தமது கைகூலியாக்கினர். மற்றும் திருவாங்கூர் மகாராஜா பலராமவர்மாவின் சதி, திப்புவின் விஷோச ஆலோசகர் பூர்ணையாவின் சதி அனைத்தும் சேர்ந்து மைசூர் வேங்கைக்கு பெரும் பின்னடைவைத் தேதித்தந்தது. 1799 -மே -4ம் தேதி இறுதிச் சொட்டு இரத்தம் வரை அந்நியாருக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்தார் மாவீரர் திப்பு சுல்தான் (ரஹ்).
யூனியன் ஜாக்
திப்புவின் மரணத்திற்கு பின் நான்கு வருடம் கழித்து 1803 -ல் டெல்லி செங் கோட்டையில் அவமானச் சின்னம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் யூனியன் ஜாக் கொடி ஏற்றப்பட்டது.
இரண்டு இமயங்களை தகர்த்து விட்டோம் என்று பகல் கண்வு கண்டு கொண்டிருந்த பரங்கியருக்கு விழுது போல் விதைக்கப்பட்ட தௌலா, திப்புவின் மூலம் இலட்சோப இலட்சம் தௌலாக்களும், திப்புகளும் முளைக்கப் போகிறார்கள் என்பதை அவர்கள் மிகவும் தாமதமாகவே விளங்கிக் கொண்டார்கள்.
மனித குலத்தின் அவமானச் சின்னமாகிய ''யூனியன் ஜாக்'' செங்ககோட்டையில் ஏற்றப்பட்ட பிறகு தான் இந்தியா வந்த நோக்கத்தை மெல்ல மெல்ல பரங்கியர் வெளிப்படுத்தத் துவங்கினார்கள்.
புரட்சிகர ஃபத்வா
யார் இந்த காதியானிகள் பகுதி 4
Written by ஆசிக் அஹமது
புரட்சிகர ஃபத்வா
எதிர்பார்த்தது போலவே மகலாயர்கள் பூண்டோடு அளிக்கப்பட்டனர். அதிகாரங்கள் முழுவதுமாக ஆங்கிலேயர் வசம் கை மாறின. பல இறை இல்லங்கள் இடிக்க்ப்பட்டன். ஜும்ஆ, பெருநாள் தொழுகைக்கு எந்த நேரமும் தடை வரலாம் என்ற நிலை ஏர்பட்டது.
இப்பொது தான் '' ஆங்கிலேயரின் முழு ஆதிக்கத்தின் வந்துவிட்ட இந்திய தாருல் ஹர்ப் -போர் செய்ய அனுமதிக்கப்பட்ட நாடாகும் ஆங்கிலேயரை எதிர்த்து ஜிஹாத் - போரிடுவது அனைவர் மீதும் கடமையாகும்'' என்று வரலாற்றையே மாற்றி எழுதிய புரட்சிகர ஃபத்வாவை மௌலானா ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் புதல்வர் மௌலானா ஷாஹ் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் வழங்கினார்கள்.
இந்த ஃபத்வா நாடெங்கும் காட்டுத்தீ போல் பரவி, பெருத்த அதிர் வலையை ஏற்படுத்தியது. மௌலானா ஷாஹ் அப்துல் அஜீஸ் (ரஹ்) ஃபத்வா கொடுத்ததோடு சும்மா இருந்திடவில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் முழு வெற்றியை பெற நாட்டின் அரசியல் சூழ்நிலைகளை நன்கு ஆய்வு செய்து நாடு முழுவதும் பரவியிருந்த் தம் மாணவர்களான ஆலிம்களுடன் தொடார்பு கொண்டார்கள்.
மௌலானா செய்யிது அஹ்மது ஷஹீது (ரஹ்)
ஆங்கிலேயருக்கு எதிராக ஜிஹாது செய்யவும் நாட்டில் சீர்திருத்தும் ஏற்படுத்தவும் துடிப்பு மிக்க இலைஞரான தமது மாணவர் மௌலானா செய்யது அஹ்மது ஷஹீத் (ரஹ்) அவர்களின் தலைமையில் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள்.
உ.பி- பரேலி என்னும் சிற்றூரில் 1786-ம் வருடம் ஹள்ரத் ஹஸன் (ரலி)யின் 35-வது தலைமுறையில் பிறந்த மௌலானா ஸய்யித் அஹ்மத் ஷஹீத் அவர்கள் ஆங்கிலேயருக்கு வட நாட்டின் இன்னொரு திப்புவாகவும், சிராஜுத்தௌலாவாகவும் விளங்கினார்கள் என்றால் சற்றும் மிகையல்ல.
ஆரம்பத்தில் சீர்த்திருத்தப் பணியை மேற்கொண்ட ஹள்ரத் அவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று ஆங்கிலேயருக்கு எதிராக ஆயு தங்களையும், வாலிபர்களையும் திரட்டினார்கள்.
1821-ல் ஹள்ரத் அவர்கள் தமது படையின் 800 வீரர்களுடன் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள்.ஹஜ் முடிந்து மினா பெரு வெளியில் 800 பேரிடமும் ஆங்கிலேயருக்கு எதிராக ஜிஹாத செய்ய பைஅத் - உடன் படிக்கை எடுத்தனர்.
ஹஜ் முடித்து வந்து ஆங்கிலேயரின் ஆளுமைக்கு கட்டுப்படாத ஆப்கானிஸ்தானை தமது தலைமை இராணுவ மையாமாக தேர்ந்தெடுத்து முழு வீரியத்துடன் ஆங்கிலேயருக்கு எதிராக போரை துவக்கினார்கள்.
நாளுக்கு நாள் இவர்களின் படையில் வீரர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தனர். அன்னாரது படையில் சுமார் 80,000 (என்பதாயிரம் படைவீரர்கள் இருந்ததாக ( எம்.ஏ. கரநெடிகரின் '' நவீன் மயமாகிவரும் இந்தியாவில் இஸ்லாம் (1969) பக்கம் -133,134)ல் குறிப்பு உள்ளது.
விலை போன சீக்கியர்கள் :
ஓசையின்றி ஆங்கிலேயருக்கு எதிராக மிகவும் வலுவானதொரு இயக்கம் மௌலானா ஸ்ய்யிது அஹ்மது ஷஹீத்(ரஹ்), மௌலானா ஷாஹ் முஹம்மது இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்), மௌலானா அப்துல் ஹை (ரஹ்) ஆகியோரின் தலைமையில் உருவாக்கி வருவது ஆங்கிலேயருக்கு தெரியவந்த்து. ஆங்கிலேயர் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே இந்த இயக்கத்துடன் நேரடியாக மோதினால் பெரும்பாலான மக்களின் எதிராக இந்தியர்களிலிருந்தே சிலரை உருவாக்க வேண்டுமென்று திட்டம் தீட்டினர்.
அவர்களின் இத்திட்டம் அரச பதவிக்காக அலைந்து கொண்டிருந்த சில சீக்கியர் மூலம் நிறைவேறியது அப்படிப்பட்ட சில சீக்கியர்களை விலைக்கு வாங்கினார்கள் அதன் முதற்கட்டமாக 1824 -ல் ரஞ்சித் சிங் என்பவரை ஆங்கிலேயர்கள் பஞ்சாபின் கவர்னராக ஆக்கினார்கள். அத்துடன் அக்கம் பக்கத்து கிராம வாசிகளுக்கு பணத்தை வாரி இறைத்து சீக்கியர்களுடன் அவர்களை இணைத்தனர்.
அங்கிலேயர்களின் கைப்பாவையான அந்த சீக்கியர்கள் ஆங்கிலேயரின் பின் புலத்துடன் ஆயிரக்கனக்கான முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள். பெண்களை மானபங்கப்படுத்தினர். சொத்துக்களை சூரையாடினர். முஸ்லிம்கள் மீதான இக்கொடூரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆங்கிலேயர்கள் சீக்கியர்களை கேடயமாக பயன்படுத்தியதால் அக்கேடையத்தை எதிர்கொள்வதே முஸ்லிம்களுக்கு அப்போதைய தேவையாக் இருந்தது.
இதுகாறும் ஆங்கிலேயருக்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டு வந்த மௌலானா ஸ்ய்யிது அஹ்மது ஷஹுது (ரஹ்) அவர்களின் அமைப்பு இதன் பிறகுதான் நேரடியாக போர்க்களம் காண முடிவு செய்தது இதனடிப் படையில் காபூலில் முகாமிட்ருந்த ஹ்ள்ரத் அவர்கள் தமது 10,000 சீடர்கள் 900 சுதந்திரப் போர்ராட்ட வீரர்களுடன் கைபர் கனவாய் வழியாக பெஷாவரில் ஸ்லாமிய ஆட்சியை நிறுவி, ஷரீஅத் சட்டத்தை அமல்படுத்தினார்கள். மதுவிலக்கு கண்டிப்புடன் செயாழ்படுத்தப்பட்டது ஷின்கியாரி, அகோடாகடக் போன்ற பகுதிகளை வெற்றி கண்ட மௌலானா மக்களின் பேராதரவு கிடைத்து வந்தது.
துரோகியின் தூது
தொடரும்......
யார் இந்த காதியானிகள் பகுதி 5
Written by ஆசிக் அஹமது
துரோகியின் தூது:
இந்நேரத்தில் தான் பஞ்சாப் கவர்னர் ஆங்கிலேயரின் அடிவருடி ரஞ்சித் சிங் சயிது அஹ்மத் ஷஹீத் (ரஹ்) அவர்களுக்கு தூது அனுப்புகின்றான்.''இதுவரை வென்ற பகுதிகளை நீங்களே ஆட்சி செய்து கொள்ளுங்கள். இதற்கு பின்னால் உள்ளதை என்னிடம் விட்டுவிடுங்கள்'' என்பதே அத்தூதில் கூறப்பட்டிருந்த செய்தி. ஆனால் ஸ்ய்யிது அஹ்மது ஷஹீத் (ரஹ் ) அவர்கள் ''நான் நாடு பிடிக்க வரவில்லை. ஆங்கிலேயனை இம் மண்ணிலிருந்து விரட்டுவதற்கும், மக்களின் மார்க்கத்தை பாதுகாக்கவுமே இந்நடவடிக்கையை நான் மேற்கொண்டுள்ளேன்.'' என பதிலுரைத்து ஆங்கிலேயருக்கு எதிரான தம் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
இதன் பிறகு ஆங்கிலேயர்களின் உத்தரவுக்கிணங்க ரஞ்சித் சிங் தமது சீக்கிய படைகளுடன் ஹள்ரத் அவர்கள் முகாமிட்டிருந்த பாலாக்கோட்டை முற்றுகையிட்டான் அத்துடன் அப்பகுதி மலிவால் மக்கள் சிலருக்கு பணம் கொடுத்து ஹள்ரத் ஸ்ய்யிது அஹ்மது ஷஹீது (ரஹ்) அவர்கள் அன்றாட நடவடிக்கைகளை தெரிந்து வைத்து அவர்கள் தஹஜ்ஜீத் தொழுது கொண்டிருந்த நிலையில் அவர்கள் எதிரிப்படையினர் ஷஹீதாகிவிட்டனர். இது மே-5, கி.பி. 1831 அன்று நடந்தது.
600 ஆலிம்கள் வீரமரணம்
இதற்கடுத்து மௌலானா ஷாஹ் முஹம்மது இஸ்மாயில் ஷஹீது (ரஹ்) ஆங்கிலேயருக்கு எதிராக தொடுக்க ஆரம்பித்தார்கள். ஆங்கிலேய சீக்கிய கூட்டுப்படைக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் நான்கு நாட்கள் உக்கிரமான போர் நடைபெற்றது எதிர் தரப்பில் பலர் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களில் 600 ஆலிம்கள் ஷஹீது (ரஹ்) அவர்கலும் 1831 மே- 9ல் ஷாஹீத் ஆக்கப்பட்டார்கள். இன்னாலில்லாஹி...
வெள்ளையருக்கு எதிராக எழுபது முறை தாக்குதல்
இதற்குப்பின்னர் 1857 வரை மௌலானா விலாயத் அலி, மௌலானா இனாயத் அலி, மௌலானா நூருல்லாஹ். மௌலானா மக்சூது அலி, ஆகியோர் முறையே ஒருவர் பின் ஒருவராக தலைமையேற்று ஆங்கிலேயருக்கெதிராக மிகக் கடுமையான போர்களை வந்தனர். இக்கால் கட்டத்தில் வெள்ளையருகெதிராக சுமார் 70 தடவை தாக்குதல் நடத்தி அவர்களை திக்குமுக்காடச் செய்தார்கள்.
ஆனால் ஆங்கிலேயரின் கைகள் ஓங்கிக்கொண்டே சென்றன. ஐரோப்பாவில் வேருன்றிய நிறவெறி இந்தியாவிலும் பரப்பப்பட்டது. இவ்வாறு மண்ணின் மைந்தர்களான இந்தியர்கள் இழிவுக்குள்ளாக்கப்படுவதைப் பார்த்து ஆலிம்கள் வாளாவிருக்கவில்லை.
இன்னொரு படை உருவானது
மௌலானா ஸ்ய்யிது அஹ்மது ஷாஹீத் (ரஹ்) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டு விட்டாலும் ஆங்கிலேயருக்கு எதிராக அவர்கள் சிந்திய இரத்தம் சுதந்திர வேள்வியை மேலும் தூண்டிவிட்டது. ஸ்ய்யிது அஹ்மது ஷாஹீத் (ரஹ்) அவர்கள் காட்டித்தந்த வலியிலேயே இன்னொரு ஆலிம்கள் படை உருவானது.
உ.பி. தேவ்பந்த் மற்றும் தானாபவன் பகுதியிலிருந்து தான் இப்படை உருவானது மிகப்பெரும் ஞானி ஹல்ரத் மியாஞ்சி நூர் மஹம்மது ஸாஹிப் (ரஹ்). ஹாஃபிழ் ளாமின் ஷஹீத் (ரஹ்), ஹாஜி இம்தாதுல்லாஹ் ஸாஹிப் (ரஹ்), மௌலானா ஷைக் முஹம்மது தானவீ (ரஹ்) மற்றும் மௌலானா முஹம்மது காஸிம் நானூத்தவீ (ரஹ்) மௌலானா ரசீத் அஹ்மது கங்கோஹி (ரஹ்) போன்ற ஆலிம்கள் ஆங்கிலேயருக்கு எதிராக களமிறங்கினர்.
ஷாம்லி மைதானத்தில் 1857 -ல் ஆங்கிலேயருக்கு எதிராக நேருக்கு நேர் ஆயுதமேந்தி போராடினர். ஆரம்பத்தில் வெற்றிக்கனியை எட்டிப் பறிக்க முடிந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் போர்க்களத்தில் இடது பாரிச படைத் தளபதியாக இருந்த ஹாஃபிழ் ளாமின் ஷஹீத் (ரஹ்) அவர்கள் ஷஹீதான பின் முஸ்லிம்களுக்கு தோல்வி ஏற்பட்டது.
(பார்க்க மனாருல் ஹுதா ஆகஸ்ட் - 2006)
வாழ்வா? சாவா?
தொடரும்......
யார் இந்த காதியானிகள் பகுதி 6
வாழ்வா? சாவா?
இவ்வாறு நாட்டின் பல பகுதிகளின் 1857 -ல் நடைபெற்ற சுதந்திரப் போர் ஆங்கிலேயருக்கு மிகப் பெரிய சவாலாகவே இருந்தது பிரமாண்டமான பீரங்கிப் படைகளும். இராணுவமும் இருந்த போதிலும் வெற்றியா? தோல்வியா? வாழ்வா? சாவா? என்று கதி கலங்கித்தான் போனார்கள்.
போராட்டத்தில் சகோரத சமயத்தவர்கள் சிறிதளவு கலந்து கொண்டாலும் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் தாம். அதே சமயம் மேற்சொன்ன ஆலிம்கள் மீது முஸ்லிம்களிடம் இருந்த அளவு கடந்த மதிப்பு மரியாதையைப் பார்த்த ஆங்கிலேயர் முஸ்லிம்களை நேரடியாக தாக்குவதைவிட சதிகள், கீழறுப்பு வேலைகள் மூலமே காரியத்தை சாதிக்க முடியும் என்பதை உறுதியாகப் புரிந்து கொண்டனர்.
சதிபூமி பஞ்சாப்
ஆங்கிலேயருக்கு எதிராக வலுமிக்க சக்தியாக உருவேடுட்ட மௌலானா ஸ்ய்யிது அஹ்மது ஷஹீது (ரஹ்) அவர்களின் படைக்கு எதிராக சதிகள் பல செய்து இறுதியில் ஹள்ரத் அவர்கள் வீர மரண மடையாககாரணமாக இருந்த சண்டாளன், கீழறுப்பு வேலைகளுக்கு பகரமாக பஞ்சாபின் கவர்னர் பதவியை அனுபவித்து வந்த ரஞ்சித் சிங் முழுமையாக ஆங்கிலேய கைப்பாவையாக மாறிவிட்ட பின் ஆங்கிலேயயரின் பல சதித்திட்டங்கள் பஞ்சாபில் மிக இலகுவாக கைகூடின.
ஆங்கிலேயரின் முக்கிய சதித் திட்டம்
ஆங்கிலேயரின் மிகவும் முக்கியமான சதித் திட்டங்களின் ஒன்று முஸ்லிம்களை வீழ்த்த முஸ்லிம்களிலிருந்தே ஒருவரை உருவாக்க வேண்டும் என்பது தான். (பிரித்தானியர்களின் பிரித்தாளும் சதி வரலாறுகளை படித்தவர்களுக்கு விளக்க தேவையில்லை)
அப்படி யாராவது ஒரு முஸ்லிம் கிடைத்தால் கூட அவன் விரும்பும் பணம், பதவிகள் மற்றும் எந்த விளையும் தரத் தயாராக இருந்தனர். சல்லடைபோட்டு தேடிக் கொண்டிருந்த வேளையில் பழும் நழுவி பாலில் விழுந்த கதையாக அதே பஞ்சாபிலிருந்து ஒரு முஸ்லிம் குடும்பம் பணம், பதவிக்காக முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிடவும் அக்குடும்பம் தயார் என்று கூறியது.
முஸ்லிம்களை வீழ்த்த முஸ்லிம்களே கிடைத்து விட்ட சந்தோஷத்தில் ஆங்கிலேயருக்கு தலை கால் புரியவில்லை.
யார் அந்த நயவஞ்சகன்
ஒன்றுபட்ட இந்திய துணைக் கண்டத்தில் பல கோடி முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்கிலேயனிடம் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்ட அந்த
சதிகாரன் யார்?.....
ஆங்கிலேயரின் எலும்புகளுக்காக முஸ்லிம்களுக்கு எதிராக குரைத்த அந்த பிராணி யார்?.... முஸ்லிம்களை அழிக்க வந்த ஆங்கிலேயனுடன் கைகொர்த்ட அந்த நயவஞ்ச்கன் யார்?....
வேறுயாருமல்ல....... காதியானிகள் யாரை தமது நபி என்று சொல்லிக்கொண்டு மதம் மாறியுள்ளனரோ அந்த மிர்சா குலாம் காதியானியின் தந்தை மிர்சா குலாம் முர்த்தளாதான்.
மிர்சாவே எழுதுகிறான்
ஆச்சரியம் என்னவெனில் எனது தந்தையும் எனது சகோதரரும் 1857 -ல் முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்கிலேயருடன் சேர்ந்து போரிட்டனர் என்று மிர்சா குலாம் காதியானியே கூறுகிறான்.
மிர்சாவின் தந்தைக்கு ஆங்கிலேயே அரசின் நற்சான்றிதழ்
தொடரும்......
யார் இந்த காதியானிகள் பகுதி 7
Written by ஆசிக் அஹமது
மிர்சாவின் தந்தைக்கு ஆக்ங்கிலேயே அரசின் நற்சான்றிதழ்
''நான் இந்த (ஆங்கிலேய) அரசுக்கு மிகவும் விசுவாசமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை மிர்ஸா குலாம் முர்தளா ஆங்கிலேய அரசின் பார்வையில் ஒரு விசுவாசமான விசுவாசமான நலவு நாடும் மனிதராக இருந்தார். அதனால் அவருக்கு கவர்னரின் சபையில், (அமர) சீட் கிடைத்துக் கொண்டிருந்தது. எந்த அளவுக்கெனில் மிஸ்டர் கிரேஃபன் ''பஞ்சாப் சீஃப்'' - பஞ்சாப் தலைவர்களின் வரலாறு என்று நூலில் இவரை குறிப்பிட்டுள்ளார்.
1857 -ல் அவர் தனது சக்தியையும் தாண்டி ஆங்கிலேய அரசுக்கு உதவினார் குதிரைகளுடன் ஐம்பது வீரர்களையும் அனுப்பி காலத்திற்கு பிறகு அச்சேரியுள்ளான. அதனுடைய நகல் இதோ
Translation of Certification
To,
Mirza Ghulaam Murtaza Khan
Chief of Qadiyan.
I have perused your application reminding me of your and your family's past services and rights i am well aware that since the introductions of the British Govt. You and your family have certainly remained devoted faithful and steady subjects and that your rights are really worthy of regard. In every respect you may rest assured and satisfied that the British Govt. will never forget your family's right and services which will receive due consideration when a favorable opportunity offers itself.
You must continue to be faithful and devoted objects as in it lies the satisfaction of the Govt. and your welfare.
11.8.1849 Lahore.
Translation of Mr. Robert Cast's Certification
To,
Mirza Ghulaam Murtaza Khan
Chief of Qadiyan.
As you rendered great help in enlisting sowars and supplying horse to Govt, in the mutiny of 1857 and maintained loyalty since its beginning upto date and thereby gained the favor of Govt. a Khalaf worth Rs.200/- is presented to you in recognition of good services. and as a reward for your loyalty.
Moreover in accordance with the wishes of chief Commissioner as conveyed in this no. 576 dt. 10th August 58. This parvana is addressed to you as a token of satisfaction of Govt. for your fedelity and repute.
Translation of Sir Robert Egerton
Financial Commr's
Murasala dt 29 June 1876.
My dear friend Ghulam Qadir
I have persured your letter of the 2nd instant and deeply regret the death regret the death of your father Mirza Ghulam Murtaza who was great well wisher and faithful Chief of Govt. In consideration of your family services I will keep in mind the restoration and welfare of your family when a favorable opportunity occurs.
மிர்சாவின் மூத்த சகோதரன்
எனது தந்தை மரணமான பின்பு எனது மூத்த சகோதரன் மிர்ஸா குலாம் காதிர் ஆங்கிலேய அரசுக்கு பணிவிடை செய்வதில் ஈடுபட்டார். கலக்காரர்கள் ஆங்கிலேயப் படையை எதிர்த்தபோது அவர் ஆங்கிலேய அரசின் சார்பாக் சண்டையில் கலந்து கொண்டார். (நூல் : ரூஹானி கஜாயீன், ஆசிரியர் : மிர்சா குலாம் காதியானி பாகம்- 13. பக்கம் -4,5,6)
இவ்வாறு பல கீழறுப்பு வேலைகள், பல சதிகள் மூலமாக 1857 -ல் ஆர்ப்பரித்து வந்த சுதந்திர வேள்வியை அடக்கி ஒடுக்கி ஆங்கிலேயர் ஒரு வாராக அபாயத்திலிருந்து மீண்டனர் .
ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலக முஸ்லிம்கள்
தொடரும்......
யார் இந்த காதியானிகள் பகுதி 8
ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலக முஸ்லிம்கள்
19 -ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே இந்தியாவின் மட்டுமின்றி உலகில் பல பாகங்களின் ஐரோப்பிய ஏ காதிபத்திய ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் ஜிஹாத் செய்து வந்தனர்.
இந்தோனேஷியாவில் டச்சு சாம்ராஜ்யத்துக்கு எதிராக இமாம் பவிஞ்சூல் (ரஹ்) 1827 அவர்களின் தலைமையிலும், ரஷ்யாவில் தாகிஸ்தான் பகுதியிலிருந்து ஷைக் முஹம்மது ஷாமில் (ரஹ்) (1870) அவர்கள் ரஷ்யப்படைக்கு எதிராகவும் அல்ஜஸாயிரில் பிரெஞ்சு படைக்கு எதிராக ஆமீர் அப்துல் காதிர் (ரஹ்) (1880) அவர்களின் தலைமையிலும், ''உகுவ்வதுல் இஸ்லாம்'' அழைப்பாராகிய ஜமாலுத்தீன் அஃப்கானீ (ரஹ்)ன் மூலம் ஈர்க்கப்பட்ட அஃராபி பாஷா அவர்கள் 1881-ல் மிஸ்ர் பகுதியில் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியாத்திற்கு எதிராக மாபெரும் இயக்கமே நடத்தினார்கள். மஹ்தீ சூடானி என்ற பெயரில் பிரபலமான முஹம்மது அஹ்மது (ரஹ்) அவர்கள் பிரித்தானியருக்கு எதிராக சூடானில் ஜிஹாத் இயக்கம் நடத்தினார்கள்.
இந்தியாவிலோ மேற்கண்டபடி ஸ்ய்யிது அஹ்மது ஸாஹிப் (ரஹ்) அவர்கள் மூலம் உருவான ஆங்கிலேயருக்கு எதிரான ஜிஹாத் படை தொடர்ந்தது .
பாட்னா சாதிக்பூரின் மௌலானா விலாயத் (அலி) (1852) மற்றும் இனாயத் அலி (ரஹ்) (1857)ன் தலைமையில் நடைபெற்று வந்த ஜிஹாத் எழுச்சி ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பிய ஏகதிபத்தியத்திற்கு பின்னடைவை ஏர்படுத்திக் கொண்டிருப்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்ட ஆங்கிலேயர் முஸ்லிம்களிடமிருந்து ஜிஹாத் உணர்வை நீக்கினால் தான் நமது இலக்கை அடைய முடியும் என்று முடிவுக்கு வந்தனர்.
W.W. ஹெண்டர் ரிப்போர்ட்
1869-ல் இந்திய வைஸ்ராய் லார்டு மாயு (MAYO) என்பவர் வங்காள சிவில் சர்வீஸ் அதிகாரி W.W. ஹெண்டரிடம் ''இந்தியா முஸ்லிம்கள் மத அடிப்படையில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளனர்? என்பதை ஆய்வு செய்து ரிப்போரிட் சமர்ப்பிக்கும்படி கூறினார்.
இதன்படி W.W. ஹெண்டர் தனது ஆய்வுக்கு முக்கிய விஷயங்களை எடுத்துக் கொண்டார். 1. இஸ்லாமிய கொள்கைகளில் குறிப்பாக ஜிஹாத் சிந்தனை. 2. மஹ்தி (அலை), ஈஸா (அலை)யின் வருகைப் பற்றிய கொள்கை, 3. இந்தியா தாருல் ஹர்ப் ஜிஹாத் செய்ய அனுமடிக்கப்பட்ட நாடு என்பதில் உலமாக்களின் ஃபத்வா. 4. வஹ்ஹாபிஸ்ம். 5. இஸ்லாமிய அமைப்புகள்
இவைகளை மையமாக வைத்து ஆய்வு செய்து ஹெண்டர் சமர்ப்பித்த ஆய்வறிக்கை இத்துதான், அதாவது ''முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும், மார்க்கப் பற்றிற்கும் இஸ்லாத்திலுள்ள ஜிஹாதிய சிந்தனை தான் அடிப்படைக் காரணமாக உள்ளது இவ்வகை கொள்கை தான் அவர்களை அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று திரட்டுகிறது. (நூல் :W.W. ஹெண்டர்- The Indian Musalman காம்ரேடு பப்ளிஷர்ஸ், கொல்கத்தா - 1945)
W.W. ஹெண்டரின் இந்த ரிப்போர்ட்டுக்குப் பின்புதான் ''1857 போன்று இனி ஜிஹாத் எழுச்சிக்கு ஒரு போதும் வழிவகுத்து விடக்கூடாது. முடிந்த வரை முஸ்லிம்களை அரசியல் ரீதியாகவும். பொருளாதார ரீதியாகவும் பல கீனப் படுத்தவதுடன் பிரிட்டிஷ் அரசுக்கு உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளையும் அடக்க வேண்டும்.'' என்ற் முடிவுக்கு ஆங்கிலேயர் வந்தனர்.
இங்கிலாந்து குழு இந்தியா வருகை
தமது இந்த இலக்கை அடைய பிரித்தானிய அறிவு ஜீவிகள், மேல்மட்ட அரசியல் வல்லுனர்கள், பிரிட்டிஷ் பார்லிமென்ட் உறுப்பினர்கள், கிறிஸ்தவமத வழிகாட்கள் கொண்ட ஒரு குழு 1869-ல் இங்கிலாந்திலிருந்து இந்தியா விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இக்குழுவின் வேலை
(1) 1857 கலகத்திற்கு உண்மையான தூன்டுகோல் என்ன? (2) இதில் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன? (3) இனி ஒரு போதும் எந்த வகையிலும் முஸ்லிம்கள் ஒன்று சேர முடியாத அளவு முஸ்லிம்களின் ஒற்றுமையை தகர்ப்பது, அரசாங்கத்திற்கு ஏற்படும் அபாயத்தை நீக்குவது போன்ற முக்கியமான வேலையை பொறுப்பேற்று செய்யகூடிய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு இந்தியாவிலுள்ள ஏதேனும் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக குறிப்பாக இஸ்லாத்திற்கு உள்ளிறுந்தே இருக்கவேண்டும்.
இம்முன்றும் பொறுப்புகளையும் தாங்கி பிரிட்டிஷிலிருந்து வந்த குழு இந்தியாவின் சிவில் சர்வீஸ் அதிகாரிகளை குறிப்பாக யூதர்களை சந்தித்தனர் உளவுத்துறை ரிப்போரிட்டையும் ஆய்வு செய்தனர். மற்றும் இந்திய அரசியல் நிலைகளை ஒப்பாய்வு செய்தனர்.
இக்குழுவின் லண்டன் மாநாடு
ஒரு வருடத்திற்கு பிபு இக்குழுவினர் லண்டனில் ஒரு கான்ஃபிரான்ஸ் கூட்டினர். அதில் இந்தியாவின் முன்னணி மிஷனரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கான்ஃபிரான்ஸ்ல் (1) பிரிட்டிஷ் கமிஷனின் ரிப்போர்ட் (2) மிஷனரிகளின் புறத்திலிருந்து இந்தியாவில் மத ஒழிப்பு வேலை செய்யும் புரோகிராமின் ரிப்போர்ட் ஆகிய இரண்டையும் சேர்த்து (The Arrival of British Empire in India) பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இந்திய வருகை என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இதிலுள்ள முக்கியமான சில திட்டங்கள் பின்வருமாறு.
தொடரும்......
யார் இந்த காதியானிகள் பகுதி 9
இதிலுள்ள முக்கியமான சில திட்டங்கள் பின்வருமாறு.
இந்த (இந்திய) நாட்டின் பெரும்பாலான பகுதி மக்கள் அஞ்ஞனா இருளிலும், மூடப்பழக்க வழக்கத்திலும் உழலுகின்றனர். போலிகளை கண்முடித்தனமாக பின் பற்றுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் தன்னை நபியின் நிழலாக உள்ளேன் என்று வாதிடக்கூடிய ஒருவரை நாம் தேட வேண்டும் இதில் நாம் வெற்றி பெற்றால் மக்கள் அனைவரும் அவரை சூழ்ந்து கொள்வர்.
என்றாலும் இந்த நோக்கத்திற்காக முஸ்லிம் பொது மக்களில் ஒருவரை ஊக்கப்படுத்துவது சிரமம் தான். எனினும் இக்காரியம் கைகூடிவிட்டால் அந்த நபரின் நபித்துவத்தை நாமே நமது அரசாங்க மேற்பார்வையிலேயே பரவச் செய்திடலாம். (ரிப்போரிட் இன்டியா ஆஃபிஸ் லைப்ரரி லண்டன்)
REPORT OF MISSIONARY FATHERS
''Majority of the population of the country blindly follow their 'Peers' their spiritual leaders. if at this Stage. We succeed in finding out some who would be ready to declare himself a Zilli Nabi (apostolic prophet) then the large number of people shall rally round him. But for this purpose, it is very difficult to persuade some one from the Muslim masses. if this problem is solved, the prophet hood of such a person can flourish under the patronage of the government. (Extract from the printed Report, India office Library, London)
இந்த ரிப்போரிட்டின் பரிந்துரையின் பேரில் அத்தகைய ஒரு மனிதரைத் தேட ஆரம்பித்தனர். முன்பு நாம் கண்டது போல் பஞ்சாபின் மிர்ஸா குலாம் முர்தளா ஆங்கிலேயருக்கு நெருக்கமாக இருந்ததை வைத்து மிர்ஸா குலாம் முர்தளாவின் இளைய மகன் மிர்ஸா குலாம் அஹ்மது வின் மீது ஆங்கிலேயரின் பார்வை பட்டது.
ஆங்கிலேயர் மிர்ஸா குலாம் தொடர்பு
மிர்ஸா குலாம் அஹ்மதுவின் தந்ததை மிர்ஸா குலாம் முர்தளாவின் சில நிலபுலங்கள் சீக்கியர்களின் காலத்தில் பறிபோய்விட்டன. இது விஷயமாக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்நிலத்தை பெற ஆங்கிலேயரின் உதவியை நாடினார். இவ்வாறு 1864-ல் ஆங்கிலேயருடன் அடிக்கடி சந்திப்பு ஏற்பட்டது. இந்த தொடர்பை பயன்படுத்தி மிர்சா குலாம் முர்தளா தன் மகன் மிர்சா குலாம் அஹ்மதுவிற்கு ஸியால்கோட் கோர்ட்டில் வேலை வாங்கிக் கொடுத்தார்.
1864 முதல் 1868 வரை இங்கு மிர்சா குலாம் அஹ்மது வேலை செய்தான். அக் காலகட்டத்தில் ஐரோப்பிய மிஷனரிகள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளுடன் மிர்சா குலாம் அஹ்மதுவிற்கு நெருங்கிய தொடர்பு ஏர்பட்டது.
யூத அதிகாரிக்கு மிர்சாவின் உதவி
யார் இந்த காதியானிகள் பகுதி 10
Written by ஆசிக் அஹமது
யூத அதிகாரிக்கு மிர்சாவின் உதவி
இங்கு ஒரு சம்பவத்தை குறிப்பிடுவது மிக பொருத்தமாகும் அரபு நாட்டிலிருந்து முஹம்மது ஸாலிஹ் என்ற ஓர் அரேபியர் 1868 -ல் ஸியால் கோட் கோர்ட்டிற்கு ( ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் வந்துவிட்ட) ''இந்தியா தாருல் ஹர்ப் - (ஆங்கிலேயரை எதிர்த்து) ஜிஹாது செய்ய அனுமதிக்கப்பட்ட நாடு'' என்று புனித மக்கா, பரிசுத்த மதீனாவின் முஃப்திகள் வழங்கிய ஃபத்வாவை எடுத்து வந்திருந்தார்.
இது ஆங்கிலேயருக்கு தெரியவந்த போது, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக உளவு பார்த்தாக குற்றம் சாட்டி அவர் கைது செய்யப்பட்டார். அவரது வழ்க்கை டெப்டி கமிஷ்னர் Parkinson என்ற யூதரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வெறிபிடித்த யூதன் முஹம்மது ஸாலிஹ் அரபியுடன் தொடர்புள்ள அனைத்து முஸ்லிம்களையும் கைது செய்ய நாடினான்.
ஆனால் அரபி தெரியாது. அந்த யூதனுக்கு முஹம்மது ஸாலிஹ் பேசிய அரபியை மொழி பெயர்த்து உதவியது யார் தெரியுமா? திருவாளர் (?) மிர்சா குலாம் அஹ்மது தான்.
பாதிரி பட்லர் M.A. உடன் மிர்சா இரகசிய பேச்சு வார்த்தை
ஆரம்பத்தில் முஸ்லிமாக இருந்த மிர்சா குலாம் அஹ்மது இஸ்லாத்திற்கு எதிராக ஆங்கிலேயர் களால் நபியாக அனுப்பபடுவதர்காக நடந்த இரகசிய பேச்சு வார்த்தைகள் மிர்சா குலாம் காதியானி, ''ஸியால் கோட்''டில் ( 1864-1868 ) உத்தியோகம் செய்த காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய உளவுத்துறையின் மிக முக்கிய நபரும் ''ஸியால் கோட்'' பகுதிக்கு மிஷனரி வேலைகள் பொறுப்பாளருமான பாதிரி பட்லர் M.A .வுடன் மிர்சா குலாம் காதியானிக்கு மிகவும் நெருக்கமான தொடர்ப்பு ஏற்பட்டது இருவருரிடையே நீண்ட நீண்ட சந்திப்புகள், இரகசிய உரையாடல்கள் நடந்து வந்தன.
மிர்சாவின் மகன் கூறுகிறான்
இதை மிர்சா குலாம் அஹ்மதுவின் மகன் மிர்சா மஹ்மூதே இவ்வாறு கூறுகிறான்:
''ஸியால்கோட்'' பகுதிக்கு மிஷனரி வேலைக்கு பொறுப்பாளரான பாதிரி பட்லர் M.A., ஹள்ரத் சாஹிபுடன் (மிர்சாவுடன்) நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருப்பார். தனது பணி முடித்து செல்லும் போது பட்லர் M.A.ஸியால்கோட் கோர்ட்டுக்கு ஹல்ரத் அவர்கள் சந்திக்க வந்தார்.
அவரைப் பார்த்த டிப்டி கமிஷ்னர் பர்கின்ஸன் (Parkinson) அவரிடம் சென்று நீங்களே வருகை தந்திருக்கிறீர்களே என்ன காரணம்? என்று கேட்ட போது, நான் மிர்சா சாஹிப் அவர்களை சந்திப்பதற்கா கவே வந்துள்ளேன் என்று பாதிரி பட்லர் M.A. கூறினார். பிறகு ஹல்ராத் (மிர்சா) அவர்கள் அம்ர்ந்திருந்த இடத்திற்கே நேராக வந்தமர்ந்து நீண்ட நேரம் பேசிவிட்டுச் சென்றார்.
( நூல்: ஸீரத்தே மஸீஹே மவ்வூது பக்-15, மிர்சா முஹ்முது அஹ்மது வெளியீடு - ரப்வா)
இதே விஷயத்தை மிர்சா முஹ்மூத் தனது ஓர் உரையில் பின்வருமாறு விளக்குகிறான் '' அந்த நேரம் பாதிரிகளுக்கு மிகுந்த (ருஅப்) மதிப்பச்சம் இருந்தது ஆனாலும் ஸியால்கோட் பகுதி மிஷனரி வேலைக்கு பொறுப்பாளி யானவர் (பட்லர்) பணி நீங்கி செல்லும் போது ஹள்ரத் ஸாஹிபை (மிர்சாவை) சந்திக்க நேரடியாகவே வந்தார். அவரைப் பார்த்த டெப்டி கமிஷ்னர் (Parkinson) அவரை வரவேற்க சென்று. தாங்கள் ஏன் வந்தீர்கள், ஏதேனும் வேலை இருந்தால் சொல்லுங்கள் என்றார், ஆனால் அவர், நான் தங்களின் முன்ஷீ ( குமாஸ்தா மிர்சா )யைத்தான் சந்திக்க வந்துள்ளேன் என்றார். ( நூல்: அல்பழ்ல் காதியான், ஏப்ரல்-24, 1934.)
மிர்சாவின் தீடிர் ராஜினாமா
இந்த இரகசிய சந்திப்பிற்குப்பின் மிர்சா குலாம் இதே 1868 -ஆம் ஆண்டு எந்து காரணமும் இன்றி உடனடியாக ஸியால்கோட் கோர்ட்டின் குமாஸ்தா வேலையை இராஜினாமா செய்து விட்டு நேரடியாக காதியான் சென்று விட்டான். அதன் பிறகு நூல்கள் எழுத ஆரம்பித்தான்.
காதியானி மடத்திற்கு அடித்தனமிடல்
இதன் மூலம் பின்னால் மிர்சா குலாம் தன்னை நபி என்று குறி பலரை வழிகெடுத்து அஹமதிய்யா என்று உருவெடுத்த இஸ்லாத்திற்கு எதிரான காதியானி மதத்திற்கு யூத அதிகாரிகள், ஐரோப்பிய மிஷனரிகள் குறிப்பாக பாதிரி பட்லர் M.A. உடனான இரகசிய பேச்சுக்களின் போதுதான் அடித்தான மிடப்பட்டது என்பது இரண்டும் இரண்டும் நான்கு என்பது போல் மிகத் தெளிவாக புரிகிறதல்லவா! இதன் பிறகு யாகுக்கேனும் இது புரியவில்லையேனில் அல்லது புரியும் சக்தியில் குறைவு இருக்கலாம் அல்லது அவர் இஸ்லாத்தை விட்டு மதம் மாறியவராக இருக்கலாம்.
யார் இந்த காதியானிகள் பகுதி 11
Written by ஆசிக் அஹமது
காதியானி மதத்திற்கு அடித்தளமிடல்
இதன் மூலம் பின்னால் மிர்சா குலாம் தன்னை நபி என்று கூறி பலரை வழிகெடுத்து அஹ்மதிய்யா என்று உருவெடுத்த இஸ்லாத்திற்கு எதிரான காதியானி மதத்திற்கு யூத அதிகாரிகள், ஐரோப்பிய மிஷனரிகள் குறிப்பாக பாதிரி பட்லர் M.A. உடனான இரகசிய பேச்சுக்களின் போதுதான் அடித்தள மிடப்பட்டது என்பது இரண்டும் இரண்டும் நான்கு என்பது போல் மிகத் தெளிவாக புரிகிறதல்லவா!இதன் பிறகு யாருக்கேனும் இது புரியவில்லையெனில் அவரது புரியும் சக்தியில் குறைவு இருக்கலாம் அல்லது அவர் இஸ்லாத்தை விட்டு மதம் மாறியவராக இருக்கலாம்.
முஸ்லிம்களுக்கு எதிராக மிர்சா நூல் எழுதுதல்
மிர்சா குலாம் அஹ்மது, காதியான் வந்த பிறகு மிகவும் ஓர்மையோடு பல நூல்கள் எழுத ஆரம்பித்தான்.
மிகப்பெரிய திட்டம் போட்டு மிர்சாவை ஆங்கிலேயர் தமது வளர்ப்பில் எடுத்த்தன் நோக்கம் '' ஆங்கிலேருக்கு எதிரான முஸ்லிம்களின் ஜிஹாது எழுச்சியை முடக்குவதுதான், ஆகவே ஆங்கிலேயருக்கு எதிராக ஜிஹாது செய்வது கூடாது என்பதற்கு மார்க்க முலாம் பூசி மிர்சா நூல்கள் எழுத ஆரம்பித்தான்.
இதை மிர்சா குலாமின் வார்தையின் மூலமே அறிவோம். இதோ மிர்சா கூறுகிறான்:
எனது தந்தை மற்றும் சகோதரரின் மரணத்திற்குப் பின் நான் மறைந்திருக்கும் மனிதராகவே இருந்தேன். அதுவரை 17 வருடங்களாக ஆங்கிலேய அரசாங்கத்திற்கு உதவுவது. உறுதிப்படுத்துவதை எனது பேனாவினால் செய்துவந்தேன். இந்த 17 வருட காலத்தில் நான் எழுதிய அனைத்து நூல்களிலும் ஆங்கிலேய அரசுக்கு வழிபடுவது, உடவுவதர்காக மக்களை தூண்டியுள்ளேன். ஜிஹாது கூடாது என்று மிகவும் உறுதியான முறையில் எழுதியுள்ளேன்.
மேலும் ''ஜிஹாது கூடாது என்பதை மற்ற நாடுகளுக்கும் பரப்புவதற்காக அரபி, ஃபார்ஸி மொழியிலும் நூல்கள் எழுதி பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து அவற்றை பரப்பினேன். அந்த நூல்களை அரபு நாடுகளில் பரப்ப ஏற்பாடு செய்தேன்.
இதை நான் ஆங்கில அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நலவு நாடுவதற்காக ஆங்கிலேயருக்கு எதிரான ஜஹாது சிந்தனைய தடுப்பதற்காகத்தான் எழுதினேன்
இது ஒரு தான் இரண்டு நாட்கள் அள்ள , 17 வருடங்களை இதில் நான் செல்வளித்துள்ளேன், அந்த நூல்களையும் ஆங்கில அரசிற்கு வழி பட பட்டியலிடுகிறேன். (மிர்சாவே பட்டியடும்)
அந்த நூல்களின் விபரம் :
நூல்களின் பெயர்கள் பதிப்பு ஆண்டு பக்கங்கள்
1. பராஹீனே அஹ்மதியா 3-ம் பாகம் கி.பி.1882 அலிஃப் முதல் பா வரை
2. பராஹீனே அஹ்மதியா 4-ம் பாகம் கி.பி.1884 அலிஃப் முதல் தால் வரை
3. ஆரியதர்மம் (நோட்டீஸ்) 1885-செப்-22 (57-64)
4. இல்திமாஸ் ஷாமில் ஆரியதர்மம் 1895-செப்-22 (1-4)
5. தர்காஸ்த் ஷாமில் ஆரியதர்மம் 1895-செப்-22 (69-72)
6. கத்-தர்பாரா தவ்சீஃ தஃபா 298 1895-அக்-21 (1-8)
7. ஆயினேயே கமாலாதே இஸ்லாம் 1893-பிப் (17-20 மற்றும் 511-528)
8. நூருல் ஹக் -முதல் பாகம் ஹிஜ்ரி 1311 (23-54)
9. ஷஹாததுல் குர்ஆன் 22-செப-1893 அலிப் முதல் அய்ன் வரை
10.நூருல் ஹக் -2ம் பாகம் 1311ஹிஜ்ரி (49-50)
11.சிர்ருல் கிலாஃபா ஹிஜ்ரி 1312 (71-73)
12.இத்மாமுல் ஹுஜிஜத் ஹிஜ்ரி 1311 (25-27)
13.ஹமாமதுல் புஷ்ரா ஹிஜ்ரி 1311 முழு நூலும்
14.துஹ்ஃபையே கைஸ்ரியியா 25-மே-1897 தமாம் கிதாப்
15.சித் பச்சன் நவ-1895 (153-154 & தலைப்புப் பக்கம்)
16.அன்ஜாமே ஆத்தம் ஜன-1897 (283-284)
17.சிராஜே மினீர் மே- 1897 74
18.தக்மீலே தப்லீக் & ஹராயிதே பைஅத் ஜன-12-1889 4 ஒர்க்குரிப்பு & 6
19.இஷ்திஹாரே காபிலே தவாஜ்ஜீஹ் 27-பிப்-1895 தமாம் இஷ்திஹாரே எக் தரஃபா
கவர்மென்ட் &ஆம் இத்திலா கேலியே
20.இஷ்திஹாரே தர்பாரா ஸஃபீர் 24-மே-1897 (1-3)
காதன் ரூம்
21.இஷ்திஹாரே ஜல்ஸயே அஹ்பாப் 23-ஜூன்-1897 (1-4)
பர் ஜஷனே ஜீபிலி ப மகாம் காதியான்
22.இஷ்திஹாரே ஜல்ஸயே ஷீக்ரிய்யா 7-ஜூன்-1897 முழு இஷ்திஹாரும் ஒரு பேப்பர்
ஜஷனே ஜூபிலி ஹஜ்ரத் கைஸரா
23.இஷ்திஹாரே முதஅல்லிக் புஸ்ருக் 25-ஜூன்-1897 (10)
24.இஷ்திஹாரே லாஇகே தவஜ்ஜுஹ் 10-டிச-1894 முழு இஷ்திஹாரும் 1-7
கவர்மெநன்ட் & ஆங்கில மொழிபெயர்ப்பு
(நூல் : ருஹானீ கஜாயீன், பாகம்-13, பக்கம்-6-9- ஆசிரியர் :மிர்சா குலாம்)
ஆங்கிலேயர், மிர்சாவை நபியாக்கியது இந்தியாவிற்கு மட்டுமல்ல. ஆங்கிலேயருக்கு எதிராக ஜிஹாது போர் செய்வதை நடுபபதற்கும்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இஸ்லாத்திற்கு எதிராக பஞ்சாப் காதியான் ஊரில் விதைக்கப்பட்ட நச்சு விதை இந்தியாவையும் தாண்டி பல நாடுகளில் ஈமானைப் பறித்து மதம் மாற்றிக் கொண்டிருப்பதற்கு இப்போது காரணம் புரிகிறதல்லவா?
ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக
அவன் எழுதிய வாசகங்களில் சில......
தொடரும்......
யார் இந்த காதியானிகள் பகுதி 12
Written by ஆசிக் அஹமது
ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக
அவன் எழுதிய வாசகங்களில் சில......
இந்த ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கிடைக்கும் நிம்மதி மக்கா மதீனாவில் கூட கிடைக்காது (ஆதாரம்: ருஹானீ ஹஜாயீன் பாகம்-15, பக்கம்-156)
சில மடையர்கள் இந்த ( அங்கிலேய) அரசாங்கத்துடன் ஜிஹாத் செய்வது சரியா? தவறா? என்று கேட்கிறார்கள். இந்த கேள்வியே மடத்தனமானது ஏனெனில் யாருடைய உபகாரங்களுக்கு நன்றி செலுத்துவது ஃபர்லாகிவிட்டதோ அப்படிப்பட்டவர்களுடன் எப்படி ஜிஹாத் செய்ய முடியும்? உபகாரம் செய்பவர்களுக்கு திரோகம் செய்வது விபச்சாரனின் செயலாகும்.(ஆதாரம்:ருஹானீ ஹஜாயீன் பாகம்-6, பக்கம்-380)
எனது வழிமுறையாக இருக்கிறது நான் திரும்ப திரும்ப கூறுகிறேன் இஸ்லாத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளது ஒன்று இறைவனுக்கு வழிபடுவது.
இரண்டாவது ஆநியாயக்காரர்களிடமிருந்து அபயமளித்த இந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு வழிபடுவது. (ஆதாரம்:ருஹானீ ஹஜாயீன் பாகம்-6, பக்கம்-380)
இது போன்ற ஆங்கிலேய அரசாங்கத்தின் நிலவில் நம்மை விட்ட இறைவனுக்கே எல்லாப் புகழும் (ஆதாரம்:ருஹானீ ஹஜாயீன் பாகம்-13, பக்கம்-18)
என்னிடம் ஒப்பந்தம் செய்து என்னை மஸீஹ் என்று ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் ஜிஹாத் செய்வது ஹராமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்துதல்
ரூஹானீ கஜாயின் என்பது மிர்ஸாவே எழுதிய பல நூல்களின் தொகுப்பாகும். இதிலும் அவனது வேறு பல நூல்களின் நமது உயிரினும் மேலானகன்மணி நாயகம் நபி அவர்களையும் முஸ்லிம்களையும் இழிவு படுத்தி எழுதியுள்ளான் அவற்றில் ஒரு சில...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏற்பட்ட வெற்றி சிறியது. மிர்ஸாவுக்கு ஏற்படுகின்ற வெற்றி மிக அபாரமானது.(ஆதாரம்:ருஹானீ ஹஜாயீன் பாகம்-16, பக்கம்-288)
மிர்ஸாவை நபியாக ஈர்காடவர்கள் நரகவாதிகள் (ஆதாரம்:ருஹானீ ஹஜாயீன் பாகம்-11, பக்கம்-62)
என்னை ஏற்காதவர்கள் ஹராமில் பிறந்தவர்கள் (ஆதாரம்:ருஹானீ ஹஜாயீன் பாகம்-9, பக்கம்-31)
என்க்கு மாறு செய்பவர்கள் பன்றிகள், அவர்களின் மனைவிமார்கள் நாய்களைவிட இழிவானவர்கள். ((ஆதாரம்:ருஹானீ ஹஜாயீன் பாகம்-14, பக்கம்-53)
மேலும் சொந்த வாழ்க்கையில் மது அந்நியப் பெண் தொடர்பு, போதை, இவ்வாறு எழுத முடியாத அளவு தரங்கெட்டவனாக, ஒழுங்கீனமானவனாக வாழ்ந்திருப்பது அவனது நூல்களிலிருந்தே தெளிவாக விளங்க முடிகிறது.
இவன் நபியாக இருப்பதென்ன? சராசரி மனிதன் என்று கூட கூறுவதற்கு அறுகதையாற்றவனாகும். இவனைத் தான் காதியானிகள் நாக்கூசாமல் நபி யென்று கூறுகிறார்கள். அல்லாஹ் நம்மக் காப்பானாக.
காதியானிகள் உங்களிடம் வரும்போது.....
தொடரும்......
யார் இந்த காதியானிகள் பகுதி 13
Written by ஆசிக் அஹமது
காதியானிகள் உங்களிடம் வரும்போது.....
இந்த காதியானிகள் உங்களிடம் வரும்போது 'நாங்கள் காதியானிகள்' 'அஹ்மதிய்யாக்கள்' என்று சொல்லிக் கொண்டு வரமாட்டார்கள். முஸ்லிம்கள் போன்றே இருந்து நமது கலிமாவையே கூறிக்கொண்டு தங்களை முஸ்லிம்கள் என்றே கூறுவார்கள். உங்களிடம் பழக ஆரம்பிக்கும் போது உங்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்வது போன்று உதவி ஒத்தாசைகளை செய்வார்கள். பழகப் பழக துண்டுப் பிரசுரங்களை முதலில் தருவார்கள். பின்பு பஞ்சாபில் எங்களது தலைமையகம் உள்ளது. அங்கு சென்று நீங்கள் பைஅத் செய்யுங்கள். நீங்கள் பரிசுத்தமாகிவிடுவீர்கள் என்று கூறு வார்கள். இவர்களின் கவர்ச்சியான வார்த்தைகளை கேட்டு ஈமானைப் பறி கொடுத்து விடாதீர்கள்.
இஸ்லாத்திலிருந்து நீங்கியவர்கள்
''கதியானிகள் இஸ்லாடிளிருந்து நீங்கியவர்கள், கொடிய காஃபிர்கள், முஸ்லிம்களின் கப்ருஸ்தானில் அடக்கம் செய்யக்கூடாது, அவர்களிடம் திருமண உறவோ கொடுக்கல் வாங்கலோ செய்யக்கூடாது'' என்று மக்காவின் அர்ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமீ கூட்டமைப்பு, தாருல் உலூம் தேவ்பந்த், ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ்ஸா லிஹாத் - வேலூர் மற்றும் அகில உலக மத்ரஸாக்கள், இஸ்லாமிய அமைப்புகள் தீர்ப்பளித்துள்ளன. காதியானிகள் காஃபிர்கள் என்பதால் ஹஜ் செய்ய தடைவிடிக்கப்பட்டுள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகிறோம்.
ஈமான் கேள்விக்குறியாக .....
காதியானிகளுடன் பழகுபவர்கள், காதியானிகளை கண்ணியப்படுத்துபவர்கள், காதியானிகளின் சந்தோஷ, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களின் ஈமான் கேள்விக் குறியாக ஆனது மட்டுமின்றி நமது உயிரின் உயிரான கண்மணி நாயகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சாபத்திற்கு உள்ளாகிவிட்டர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
இறுதியாக.....
முஸ்லிம்களே! இஸ்லாத்திற்கெதிரான காதியானி (அஹ்மதிய்யா ஜமாஅத்) மதத்தை மிர்ஸாவின் வழித்தோன்றல்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். காதியானி எனும் இந்த விஷப்பாம்பு நமது வருங்கால சந்ததியினரின் ஈமானை விழுங்க எத்தனிக்கிறது. இஸ்லாத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஸஹாபாக்களையும் களங்கப்படுத்துவதுடன் நமது கண் எதிரே நமது சகோதர சகோதரிகளின் ஈமானைப் பறித்துக் கொண்டிருப்பதை எதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்?
அன்புள்ள நல்லடியார்களே! ஈமானை இழந்து சென்றுவிட்டவர்களை மீண்டும் இஸ்லாத்தில் இணைக்கவும் அந்த சதியில் வீழ்ந்துவிடாமல் நமது சகோதர, சகோதரிகளை பாதுகாப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவோம் வாரீர்.
SOURCE IN TAMIL www.adirai.in
Muslim World League
Serving Islam and MuslimsThe Third Resolution on Qadiani Sect and Associating with It
No comments:
Post a Comment